Supplemental Medical Insurance (SMI)

துணை மருத்துவக் காப்பீடு

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் முக்கிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான மருத்துவக் கவனிப்பில், ஏற்றுக்கொள்ளப்படாத செலவினங்களை ஈடுகட்டச் செய்யப்படும் துணை மருத்துவக்காப்பீடு. மருத்துவக் கவனிப்பு காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்தப்படும் கட்டுப்பணத்தின் (premium) விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பணம் செலுத்தும் பட்சத்தில், அதிகரித்த மருத்துவர்கள் கட்டணம், ஆய்வக சோதனைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், செயற்கை சாதனங்கள், மற்றும் பிற குறிப்பிட்ட சில மருத்துவ சேவைகளுக்கானச் செலவுகளைச் செலுத்த துணை மருத்துவக் காப்பீடு உதவும்.

English

A major component of Medicare to help pay the costs of physicians' fees, lab tests, ambulance services, prosthetic devices, and certain other medical services. SMI pays an initial deductible, a monthly fee, and a portion (coinsurance) of the approved cost of the service.