Supplemental Security Income (SSI)
துணை வருமானப் பாதுகாப்பு திட்டம்
தமிழ் விளக்கம்
வரையறுக்கப்பட்டதற்கும் குறைவாக வருமானமீட்டும், ஏழைகளான முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், குறைந்த பட்ச வருமான அளவிற்கான பண உதவி செய்ய, 1972 ஆம் ஆண்டு அமெரிக்க மத்திய அரசு ஏற்படுத்திய பொது உதவித் திட்டம். இத்திட்டத்தின் பயனாளர்கள், இதற்குமுன் பார்த்த வேலையைக் கணக்கிலெடுக்காது (சமூகப் பாதுகாப்பிற்கான சந்தாவைக் கணக்கிலெடுக்காது), அவர்களின் நிகழ்கால வருமானத்தை அளவீடாகக் கொண்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான நிதிஉதவியின் பெரும்பகுதி மத்திய அரசாலும், சிறிது மாநில அரசுகளாலும் கொடுக்கப்பட்டு, சமூகப் பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. முதியோர் உதவி, சமூகக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளின் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் நபர்களுக்கான உதவி, மருத்துவக் காப்பீடு திட்டதிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து துணை வருமானப் பாதுகாப்பிற்கான திட்ட நிதி எடுக்கப்படுவதில்லை. துணை வருமானத் திட்டத் தகுதி வரையறைகள் தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம் அமலுக்கு வந்த பிறகு மாற்றம் கண்டுள்ளது.
English
The federal public assistance program, established in 1972, that provides a minimum cash income for poor people who are elderly, have a disability, or are blind. Eligibility for SSI is determined by a means test and not related to one's previous work record. Funding comes from the federal treasury and is usually supplemented by state funds. It is administered primarily by the Social Security Administration (SSA), although its funds do not come from the money earmarked for financing Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI). The SSI program's benefits and eligibility were modified in the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (P.L. 104-193).