supply subsidy

வழங்கல் மானியம், குறைதீர் மானியம், குறைவறுப்பு மானியம்

தமிழ் விளக்கம்

சேவைகளை வழங்கப் புதிதாக முயற்சிகளை எடுக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துமுகமாக வழங்கப்படும் மானியம் / நிதி உதவி. இது தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்படும் மானியங்களிலிருந்து / உதவிகளிலிருந்து வேறுபட்டது. எடுத்துக்காட்டாக உணவு அடையாளச் சீட்டு, படிவம் / பணமோ பணயுதவியோ பெறுவதற்காகக் கொடுக்கப்படும் படிவங்களை வைத்துப் பயனாளிகள் ஏற்கெனெவே செயல்பட்டு வரும் நிறுவனங்களிடம் சேவையைப் பெறமுடியும். இது தேவையைப் பூர்த்தி செய்ய வழங்கப்படும் (demand subsidy) மானியம் எனப்படும். மாறாகப் பொது வீட்டு வசதித் திட்டங்களில் முதலீடு செய்து வீடு வழங்கலை அதிகரிக்கும் நிறுவனங்கள், புதிதாகச் சேவையை வழங்குவதால் அவை வழங்கு நிறுவனங்கள் எனப்படும். இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் வழங்கு மானியம், குறைதீர் மானியம் எனப்படும்.

English

The concept of providing funds to organizations or allocating funds to establish new organizations so that they can provide services. This is in contrast to the demand subsidy concept, in which funds or vouchers are provided to individuals and families so that they can purchase goods and services in the existing service-providing market. Public housing is an example of the supply subsidy concept, and food stamps are an example of demand subsidy.