support group

ஆதரவுக் குழு

தமிழ் விளக்கம்

ஒரே தன்மையான, பொதுவான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் ஒன்றிணைந்து குழுவாகி, தங்களுக்குள் பரஸ்பர ஆறுதலளித்துக்கொண்டு, ஊக்கமளித்துக்கொண்டு, தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, உணர்வுகளுக்கு உணவிட்டு ஒன்றிணைந்திருப்பவர்களை ஆதரவுக் குழு எனலாம். இந்தக்குழுக்களில் சில, சமூகப்பணியாளர்களால் வழிநடத்தப்பட்டாலும், பெரும்பாலான குழுக்கள் குழு உறுப்பினர்களாலே கொண்டு செலுத்தப்படுகின்றன.
பார்க்க: Caregiver support group - பராமரிப்பாளர் ஆதரவுக் குழு - இயல்பான அன்றாட வாழ்க்கை வாழஇயலாத மூப்படைந்த பெற்றோர்கள், நோயினாலோ ஊனத்தினாலோ கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், தனிக்கவனம் தேவைப்படுபவர்கள், மனநோய் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பவர்களின் மன அழுத்தங்களையும், துயரங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆறுதலாயிருக்க உதவுவதுதான் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவுக்குழுக்கள். இந்தக்குழுக்கள் சமூகப்பணியாளர்களாலோ, பிற சிறப்புத் தொழிலினராலோ, அல்லது உறுப்பினர்களாலோ அமைக்கப்படலாம்.

English

A structured ongoing series of meetings between people who share a common problem and who give advice, encouragement, information, and emotional sustenance. The group may be led by a professional social worker but more often comprises only the members themselves, and the degree of structure varies considerably.