support system

ஆதரவான அமைப்பு

தமிழ் விளக்கம்

தனிமனிதர்களுக்கு உணர்வு ரீதியான, தகவல் ரீதியான, பொருள் ரீதியான உதவிகளைக் கரிசனத்துடன் வழங்கும் மக்கள், உதவியாதரங்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சேர்க்கையை ஆதரவான அமைப்புகள் எனலாம். உதவி வேண்டும் போது உதவி செய்யத் தயாராக உள்ள நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், உறுப்பினராக உள்ள அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆதரவான அமைப்புகளில் அடங்குவர்.

English

An interrelated group of people, resources, and organizations that provide individuals with emotional, informational, material, and affectional sustenance. Members of a support system may include an individual's closest friends, family members, key members of the peer group, fellow employees, membership organizations, and institutions that can be called on for help in times of need.