supportive feedback
ஆதரவான பின்னூட்டம்
தமிழ் விளக்கம்
எதிர்பார்த்த நடத்தைகளை, செயல்பாடுகளைப் பின்பற்றி நடக்கும்போதோ, எதிர்பார்த்த விளைவுகளை ஒருவர் தனது செயலால் ஏற்படுத்தும்போதோ, அதை அங்கீகரிக்கும் முகமாகக் கொடுக்கப்படும் பின்னூட்டத்தைச் சமூகப்பணியில் ஆதரவான பின்னூட்டம் என்பர்.
பார்க்க: Corrective Feedback - சரிசெய்யும் முறையில் கூறப்படும் பின்னூட்டம், கருத்து - சமூகப்பணி நிர்வாகத்திலும், மேற்பார்வையிலும் ஏற்கெனவே பின்பற்றப்படுகின்ற நடைமுறைக்கும், பின்பற்ற அல்லது அடைய நினைக்கின்ற நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் பற்றிக் கருத்து சொல்வது. இக்கருத்து நேர்மறையானதாகவோ, எதிர்மறையானதாகவோ இருக்கலாம். இக்கருத்து குறை காணும் மனோபாவத்துடன் இல்லாமல், விரும்பிய இலக்கை அடைய உதவுவதாய் இருக்க்வேண்டும். செய்வன திருந்தச் செய்ய உதவியாய் இருக்கவேண்டும். உதாரணமாக மாணவர்களின் முன்னேற்றம் கருதி இந்த மாதிரியான கருத்துக்கள் சொல்வது கல்வி நிலையங்களில் வாடிக்கை.

English
In social work administration and supervision, the communication of approval when observing the fulfillment of desired behaviors. See also corrective feedback.