supportive treatment

ஆதரவான சிகிச்சை

தமிழ் விளக்கம்

மருத்துவத்தில் ஆதரவான சிகிச்சையென்பது நோயின் உள்ளார்ந்த காரணங்களில் அதிகக் கவனம் செலுத்தாது, நோயாளியைக் கவலைக்குள்ளாக்கும் நோய் அறிகுறிகளை உடனடியாகத் தீர்த்து வைத்தலாகும். மருத்துவ எடுத்துக்காட்டு தொற்று நோய்க்கு உடனடியாக நுண்ணுயிர்க் கொல்லி ஊசி மருந்து செலுத்துதல். மானுட சேவையில் ஈடுபட்டுள்ள எல்லாத் தொழிலினரும் ஆதரவான சிகிச்சையைக் கையாள்வது இயல்பான ஒரு அணுகுமுறை. சமூகப்பணியிலும் பிரச்சனையோடு வரும் வாடிக்கையாளரிடம், அந்தப் பிரச்சனைக்கான காரண காரியத்தை, அதன் ஆழத்தை அறிய எடுத்தவுடன் முயலாமல், ஆறுதலான வார்த்தைகள் மூலம், அந்தப் பிரச்சனையிலிருந்து வாடிக்கையாளரால் மீண்டுவரும் அளவிற்குப் போதிய வலு அவரிடம் தென்படுவதாக அவரை உற்சாகப்படுத்தி நம்பிக்கையளிப்பது.

English

The helping interventions used by social workers and other professionals, designed primarily to help individuals maintain adaptive patterns. This is done in the interview through reassurance, advice giving, information providing, and pointing out client strengths and resources. Supportive treatment supposedly does not seek to reach unconscious material. However, the boundaries between supportive therapy and "deeper" insight therapies are unclear and overlapping.