surrogacy

வாடகைத் தாய், பதிலித்தாய்

தமிழ் விளக்கம்

ஒரு பெண் இன்னொரு பெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்றெடுப்பதுதான் சரோகசி எனும் வாடகைத்தாய் நடைமுறை. சரோகசி என்கிற இந்தச் சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காகப் பயன் படுத்துவதுதான் இந்தச் சரோகசி. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட் மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது. குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். அத்தகைய குறைகளைச் சரி செய்யக் கடைப்பிடிக்கப்படும் முறைதான் ‘செயற்கை முறைக் கருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து, மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறை சாத்தியப்படும். கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி, வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்துக் கருவை வளர்த்துக் குழந்தைப் பேறு அளிக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத் தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜெஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கும் வாடகைத்தாய். இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய். தம்பதியரில் மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழலில், ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்பட்டு, வாடகைத்தாயின் கருமுட்டையைப் பயன்படுத்தி கருவுற்று குழந்தை பெறுவது. அதாவது, முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

English

A form of reproductive technology in which a man donates his sperm or a woman donates her egg or use of her body so that a fetus can be conceived and developed through to birth. A male surrogate donates sperm to a "bank". The sperm, through artificial insemination, is used in conceiving a fetus in the biological mother. Male surrogacy generally is used when the man in a couple is sterile, so that the couple can have a baby that is 50 percent biologically related. A female surrogate donates an egg; the egg then is artificially inseminated with the sperm in a petri dish. The fertilized egg is then placed in the uterus. Female surrogacy generally is used when a woman's anatomy or physiology precludes development of a healthy fetus. Usually the surrogate mother who carries the fetus to delivery is paid and is contracted to relinquish the baby soon after birth. Legal debates have challenged whether these contracts are irrevocable.