survival bonding

உயிர் பிழைத்திருப்பதற்கான / தாக்குப் பிடிப்பதற்கான பிணைப்பு, கஷ்டத்தைக் கடப்பதற்கான பிணைப்பு, இடுக்கண் களைவதற்கான பிணைப்பு

தமிழ் விளக்கம்

மிகச் சிக்கலான பிரச்சனைகளைக் கையாளும் சமூக சேவை நிறுவனங்களில், சமூகப்பணியாளர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் அவர்கள் சோர்வுறாமலும், உடைந்து போகாமலிருக்கவும், பணிப்பொறுப்புகளை ஒன்றிற்கு மேற்பட்ட சமூகப்பணியாளர்களிடம் ஒப்படைத்து, இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்வதன் மூலம் பணிக் கஷ்டத்திலிருந்து விடுபட ஏற்பாடு செய்யப்படும் பணிப் பிணைப்பு என்று இதை விளக்கலாம். இணைந்து, ஒருவரை ஒருவர் சார்ந்திருந்து, தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, தனிமையைப் போக்கி, மன / பணிப் புழக்கத்திலிருந்து விடுபட இம்முறை உதவும். இம்மாதிரி இணைந்து பணியாற்றுவதென்பது, பன்முகப் பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு, மாற்றத்திற்கான நம்பிக்கை இழந்திருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது தீராத நோயுடையவர்களோடு பணியாற்றுவதில் பெருமளவு உதவும்.

English

Assigning shared responsibilities to two or more social workers in agencies with high rates of employee stress to provide them with the mutual help and collaborative opportunities needed to reduce the likelihood of burnout. Pairing gives both workers a degree of stress reduction through mutual ventilation, elimination of isolation, opportunities for the exchange of information, and mutual respect and dependence. This shared responsibility is particularly useful in working with nonmotivated multiproblem families and terminally ill clients.