survivor guilt
தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஏற்படும் கடுங்கழிவிரக்கம் / பச்சாதாபம் / குற்றவுணர்வு / சுய நிந்தை / மன உளைச்சல்
தமிழ் விளக்கம்
உடனிருந்தவர்கள் பாதிக்கப்படுமளவு நிகழ்ந்த பேராபத்திலிருந்து (எ.கா. இயற்கைப் பேரிடர், கலவரம், யுத்தம், விபத்து, பிணையக் கைது) தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஏற்படும் குற்ற உணர்வு. உடனிருந்தவர்களைக் காப்பாற்றத் தான் எதுவும் செய்யவில்லையோ என்ற ஐயப்பாட்டினால் ஏற்படும் மனஉ ளைச்சல். தப்பிப் பிழைத்தவர்களுக்கான இந்த சுய பச்சாதாபம் தொடரும் பட்சத்தில் அது அவர்களின் கண்ணோட்டத்தைப் பாதித்து, சமூகச் செயல்பாடுகளில் குறுக்கிடும். இதை தப்பித்தவர்களுக்கான நோய்க்குறித் தொகுப்பு என்றும் சொல்வர்.
English
A strong sense of shame, depression, and regret that often follows escape from some danger that harmed others. Survivors of war, earthquakes, group hostage taking, and similar experiences are particularly vulnerable. When this feeling persists and interferes with adequate social functioning, it is known as survivor syndrome.