suspended sentence

நிறுத்தி வைக்கப்பட்ட / ஒத்திவைக்கப்பட்ட தண்டனை

தமிழ் விளக்கம்

ஒரு குற்றத்திற்கான தண்டனையை நீதிமன்றம் பிரேரித்த பின்னும், குற்றவாளியை உடனடியாகச் சிறைக்கு அனுப்பாமல் அல்லது தண்டத்தொகையோ செலுத்தக் கட்டளையிடாமல், அந்தத் தண்டனையை நிறுத்தி, குறிப்பிட்ட காலம் வரை குற்றவாளியை சில நிபந்தனைகளுடன் நன்னடத்தைப் பிணையில் அனுப்பி, அந்த நிபனந்தனைகள் மீறப்படும் பட்சம், தீர்ப்பின்படி தண்டனை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவு. நன்னடத்தை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சம், தண்டனை காலாவதியாகலாம்.

English

The deferral of a legally prescribed punishment, such as incarceration or payment of damages, until a probationary period is over. The sentence may be set aside if the conditions of the probation have been met.