sustainable development (SD)
நிலைத்து நிற்கும் அபிவிருத்தி, பேண்தகு வளர்ச்சி, வளங்குன்றா வளர்ச்சி, நிலையான வளர்ச்சி
தமிழ் விளக்கம்
நார்வே நாட்டின் பிரதம மந்திரியாயிருந்த குரோ ஹார்லெம் பிரந்த்லென் (Gro Harlem Brundtland) என்ற அம்மையாரால் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி உலக ஆணைக் குழுவிற்காகத் (World Commission on Environment and Development) தயாரித்தளித்த 'நமது பொதுவான எதிர்காலம்' (Our Common Future) என்ற அறிக்கையில் (1987), முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டு விளக்கப்பட்ட வார்த்தை. அதிகரித்து வரும் மனிதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் உலகளவிலான சுற்றுச் சூழல் வளங்களின் உபயோகத்தினையும், அதனால் சுற்றுச் சூழலுக்குள் விடப்படும் பெருமளவிலான கழிவுப்பொருட்களால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும் கவனத்தில் கொண்டு, சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவம் பற்றி இந்த அறிக்கை முதன்முதலில் வலியுறுத்தியது. 'வருங்காலத் தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய ஆற்றலைப் பாதிக்காத வகையில், இன்றையத் தலைமுறையினரின் தேவைகளை நிறைவு செய்து வைக்கும் செயல்முறையே' நிலைத்து நிற்கும் / பேண்தகு வளர்ச்சி என்று பிரந்த்லென் அறிக்கை (Brundtland Report) விளக்கியது. இயற்கை வளங்களின் அடிப்படை முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நிகழ்கால மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உத்தரவாதமளிக்கும் வகையில் தொழிநுட்ப ரீதியான மாற்றங்களை நெறிப்படுத்துவதே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி அல்லது பேண்தகு வளர்ச்சி என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபணம் (FAO) வரையறை செய்கின்றது.
தொடர்ந்து பேணத் தகுந்த முறையில் பொருளாதார, சமூக, சூழல், அமைப்பு சார் நடவடிக்கைகள், நடைமுறைகள் அமைவதைப் பேண்தகுநிலை (sustainability) எனலாம். தமிழில் இதனைத் தாங்குதிறன் அல்லது நிலைத்திரு நிலை என்றும் குறிப்பிடுவதுண்டு. அண்மைக் காலத்தில் பேண்தகு நிலை என்பது, உயிரியல் தொகுதிகள் தொடர்பில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூழலியல் நோக்கில் பேண்தகுநிலை என்பதை, சூழலியல் வழிமுறைகள், செயற்பாடுகள், உயிரியல் பல்வகைமை, உற்பத்தித் திறன் ஆகியவற்றை எதிர்காலத்துக்கும் பேணும் வகையில் சூழல்மண்டலத்துக்கு இருக்கக்கூடிய வல்லமை என வரையறுக்க முடியும். இன்று, பேண்தகுநிலை என்பது புவியில் உள்ள உயிர் வாழ்வின் ஏறத்தாழ எல்லா அம்சங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்ற, உள்விரிவாக்கம் கொண்ட சொல்லாக உள்ளது. நகர நிர்வாகம், வேளாண்மை, கட்டிடக்கலை, மீள்விக்கத்தக்க ஆற்றல், போக்குவரத்து, பல்வேறு அரசுத் திட்டங்கள் உயிரியல் சார் ஒழுங்கமைப்புக்களான ஈரநிலங்கள், காடுகள் பராமரிப்பிலும் இக்கண்ணோட்டமும், கருத்தாக்கமும் பெருமளவில் அழுத்தம் பெற்றுள்ளது. மனித இனம் பேண்தகுநிலையுடன் வாழ்வதற்கு, புவியின் வளங்களின் பயன்பாடு, அவற்றை மீளுருவாக்கம் செய்யமுடிக்கின்ற வேகத்திலேயே இருக்கவேண்டும். ஆனால், தற்கால அறிவியல் சான்றுகளின்படி மனிதர் அவ்வாறு வாழவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், புவியின் வளங்களின் பயன்பாட்டு வேகத்தை, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவுக்குக் குறைப்பதற்கு முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான கூட்டுமுயற்சிகள் தேவைப்படுகின்றன. 1980 களிலிருந்து, மனிதர் சார் பேண்தகுநிலை என்னும் எண்ணக்கருவானது, பொருளியல், சமூகவியல், சூழலியல் அம்சங்களின் ஒருங்கிணைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றது. 1989 ஆம் ஆண்டில் சூழலுக்கும் வளர்ச்சிக்குமான உலக ஆணையம் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், 'பேண்தகுநிலை' என்பதற்கான வரைவிலக்கணத்தை உருவாக்கியது. இதன்படி, பேண்தகுநிலை என்பது, 'எதிர்காலத் தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பாதிக்காமல் நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகும்' என்று வரையறை செய்துள்ளது.

English
The international goal of achieving more permanent economic well-being within the existing physical environment. An economy is sustainable only when it uses but does not deplete its resources or ruin its environment for immediate economic gain.