sustaining procedures
நிலைத்து நிற்கும் நடைமுறைகள், பேணத்தகுந்த செயல்முறைகள்
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளரின் பிரச்சனைகளைக் கரிசனத்துடனும், உண்மையான அக்கறையுடனும் கேட்டறிந்து, வாடிக்கையாளரின் மீதான மரியாதையைப் பொருத்தமான முறையில் வெளிப்படுத்தி, வாடிக்கையாளரிடம் தன் மேதமை உணர்வை வெளிக்காட்டாமல், அவருடைய நம்பிக்கையைப் பெறுவதற்காகவும், வாடிக்கையாளரைத் தன்னம்பிக்கையோடு உணர வைப்பதற்காகவும் சமூகப்பணியாளர் உருவாக்கும் உறவுமுறைகளை பேணத்தகுந்த செயல்முறைகள் எனலாம். வாடிக்கையாளரை அவர்தம் குறைநிறைகளோடு அங்கீகரித்தல், வாடிக்கையாளரின் நம்பிக்கையை மீட்டெடுத்தல், ஊக்கமளித்தல், சென்றடைதல் எனும் எதிலும் அச்சம் கொண்ட, சந்தேக மனப்பான்மையுடனிருக்கின்ற, ஊக்கமிழந்த, பாராமுகமாக இருக்கின்ற வாடிக்கையாளர்களையும், சமுதாயங்களையும் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க சமூகப்பணியாளர் செய்யும் முயற்சிகளை நிலைத்து நிற்கும் நடைமுறைகள் அல்லது பேணத்தகுந்த செயல்முறைகள் எனலாம்.
English
Relationship-building activities used by the social worker to help the client feel more self-confident and confident of the worker's competence and good will, including listening with sincere interest and sympathy and conveying a sense of mutual respect rather than superiority over the client. Acceptance, reassurance, encouragement, and reaching out are other sustaining procedures.