Switzer, Mary E. (1900-1971)
மேரி எலிசபெத் சுவைசர் (1900 - 1971)
தமிழ் விளக்கம்
மேரி எலிசபெத் சுவைசர் (1900 - 1971) - அமெரிக்க மத்திய அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களை நிர்வகித்தவர். தலைசிறந்த அரசு நிர்வாகி என்று போற்றப்படுபவர். இவர் புனர்வாழ்விற்கான தொழிற்கல்வி மையத்தின் (பின்னாளில் சமூகப் புனர்வாழ்வு மையம் என்றானது) தலைவியாக இருந்தபோது, புனர்வாழ்வளிப்பதில் சமூகப்பணியாளர்களின் தேவையை உணர்ந்து, பல்வேறு ஊனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சமூகப்பணியாளர்கள் பங்கேற்பதற்கும், பணிபுரிவதற்கும் தோதாக விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்.
English
Administrator for various U.S. federal social welfare agencies, she was chief of the Office of Vocational Rehabilitation and later the Social and Rehabilitation Service, in which she established the need for social work professionalism in such programs and effectively advocated legislation to serve people with disabilities.