symbiosis
இணைந்து வாழ்தல், சேர்ந்து வாழ்தல், கூட்டு வாழ்க்கை, இணைவாழ்வுத்திறம், இருவழிப்பயன் அளிக்கும் கூட்டு வாழ்க்கை, ஒட்டி வாழ்தல், ஒத்து வாழும் பண்பு, துணைநல வாழ்வு, கூட்டுப் பிழைப்பு, ஒன்றியவாழ்வு, கொடுத்துவாங்குமியல்பு
தமிழ் விளக்கம்
ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படுவது இரு வேறுபட்ட உயிரினங்களிடையே காணப்படும் தொடர்புகளினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும். 1877 இல் பெனெற் என்பவர் பாசி - காளான்களிடையே (lichens-fungal) காணப்பட்ட தொடர்பை விளக்க இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். 1879 இல் செருமானிய ஆராய்ச்சியாளர், ஹென்ரிச் அன்ரன் டீ பரி என்பவர் ஒன்றிய வாழ்வை 'வேறுபட்ட உயிரினங்கள் இணைந்து வாழ்தல்' என வரைவிலக்கணப்படுத்தினார். ஒன்றிய வாழ்வு என்ற பதமானது உயிரினங்களின் பரந்த உயிரியல் தொடர்புகளை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையில் இந்த ஒன்றிய வாழ்வானது, அகஒன்றிய வாழ்வு (endosymbiosis), புற ஒன்றிய வாழ்வு (ectosymbiosis), ”அண்டி வாழ்தல்” (commensalism), ”இணைவாழ்வு” அல்லது ”சமபங்கித்துவம்” (mutualism), ”ஒட்டுண்ணி வாழ்வு” (parasitism) எனப் பகுக்கப்படுகின்றது. மனிதர்களிடையே உள்ள உறவுமுறைகளின் தன்மையைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப உறவுமுறைகளைச் சீரமைக்கவும் இக்கருத்தாக்கம் பயன்படுகிறது.
பார்க்க: Symbiosis - சார்பு நிலை, சார்ந்திருத்தல் - இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ தங்களின் ஆரோக்கியமற்ற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உறவு முறை. உதாரணமாக ஒரு விதவைத்தாயும், அவருடைய மகளும் தாங்கள் பிறரால் உதாசீனப்படுத்தப்படலாம் அல்லது பரிகாசத்திற்குள்ளாகலாம் என்ற பயத்தினடிப்படையில் எப்போதும் உடனிருக்கும் நிலை. இது தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் நம்பிக்கையற்ற தன்மையால் எப்போதும் உடனிருக்கும் நிலை மாதிரியோ, ஒரே மாதிரியான கருத்து திரிபு பிணி கொண்டவர்களைப் போலவோ, அல்லது வெளித்தூண்டல்களால் உருவான மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் சார்ந்திருப்பதைப் போன்றதல்ல.

English
A relationship between two organisms in which there is mutual biological or psychological dependence. This may occur between different species (flowers depend on insects for crosspollination and provide food necessary for the insects' survival) or within a species (termites help one another to survive). Symbiosis occurs between a parent and a child and to some extent between mature adults in certain mutually beneficial social relationships. The term also refers to a person's identification with others to such an extent that it blocks his or her differentiated identity. See also codependency.