symptom

அறிகுறி, அடையாளம், உணர்குறி, குணங்குறி, நோய்க் குறி; முன் அறிகுறி

தமிழ் விளக்கம்

அறிகுறி என்பது ஒருவருடைய மனதில், உடலியக்கத்தில், சமூகச் சூழ்நிலையில் இருக்கும் பிரச்சனையின் வெளிப்பாடாகும். மருத்துவ அறிகுறி (medical sign) என்பது நோயாளியிடம் இருந்து மருத்துவரால் மருத்துவப் பரிசோதனையின் போது அறியப்படும் நோயின் இயல்புகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் நோயாளிகளாலோ அல்லது பிரச்சனையால் பாதிக்கப்பட்டவராலோ அறியப்பட வாய்ப்பு இல்லை அல்லது அறிவதற்குத் தகுந்த போதுமான அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை. உதாரணமாக, மருத்துவத்தில் குருதி அழுத்தம், உடல் வெப்பநிலை, இதய நாடித்துடிப்பு, மூச்சு வீதம், குருதியில் சர்க்கரையின் அளவு, ஹீமோகுளோபின், கொலஸ்ட்ரால் போன்ற அளவுகள் உடலியக்கத்தின் தன்மையைக் காட்டுவன. எடுத்துக்காட்டாக உணர்வுகளற்ற மந்தமான மனோநிலை, மனச்சிதைவு (schizophrenia) நோயின் அறிகுறியாகவும், மனக் கவலையும், ideas of reference என்று சொல்லப்படும் இருவேறு நபர்கள் உரையாடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது தன்னைத்தான் குறிப்பிட்டுப் பேசுவதாக நினைத்துக்கொள்ளும் பிரேமை, சித்தப்பிரமையின் (paranoia) அறிகுறியாகவும், காய்ச்சல் தொற்றுநோயின் (infection) அறிகுறியாகவும், உடல் இளைப்பது பசியற்ற (anorexia nervosa) உளநோயின் அறிகுறியாகவும், பண வீக்கம் என்பது வழங்கல் மற்றும் தேவையில் ஏற்படும் பொருளாதாரச் சமநிலையின்மையையும் குறிக்கும் அறிகுறிகளாகும்.

English

An indicator of the possible presence of an underlying psychological or physical disorder or of a psychosocial problem. For example, flat affect is symptomatic of schizophrenia, depression and ideas of reference are symptomatic of paranoia, abnormally high fever is symptomatic of an infection, dramatic weight loss is symptomatic of anorexia nervosa, and inflation is symptomatic of a supply-demand imbalance.