synapse
இருநரம்பிடை இடைவெளி, நரம்பிணைப்பு, நரம்புகளின் நியூட்ரோன் முனைகள், நரம்பிணைப்பு
தமிழ் விளக்கம்
நரம்பிணைப்பு என்பது நரம்பு மண்டலத்தில் மின் சமிக்ஞையையோ வேதி சமிக்ஞையையோ ஒரு நியூரானிலிருந்து இன்னொன்றுக்குக் கடத்தும் ஓர் அமைப்பாகும். Synapse (நரம்பிணைப்பு) என்ற சொல்லானது சர் சார்லஸ் ஸ்காட் செரிங்டன் குழுவினரால் உருவாக்கப்பட்டது. நரம்பிணைப்புகளைப் பொதுவாக வேதி நரம்பிணைப்பு, மின் நரம்பிணைப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம். வேதி சமிக்ஞைகள், மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான நரம்பிணைப்புகளின் (synapse) மூலமாக நிகழ்கிறது
English
The space between adjacent neuron fibers through which neurotransmitters travel.