syndicalism
கூட்டோச்சற் கொள்கை, தொழிற்சங்க ஆட்சி இயக்கம், தொழிற்சங்கவுடைமை வாதம்
தமிழ் விளக்கம்
வேலை நிறுத்தம், அராஜகம் மற்றும் தீவிரவாத அணுகுமுறைகள் மூலம் தொழிலாளரே உற்பத்தியுரிமையையும், பொருளாதாரக் கட்டமைப்பையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்துக்கொள்ளும் நோக்கமுடைய அரசியல் இயக்கம். இதைக் கும்பல் அதிகாரம் என்றும் சொல்லலாம். வழிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாது ஒரு குழு தான் நினைத்த குறிக்கோளை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளை இந்த வார்த்தையால் குறிப்பர். எ.கா. குற்றக் கும்பல்கள், பெண்ணுரிமை சிண்டிகேட். தொழிலதிபர்களின் சிண்டிகேட், சுற்றுச் சூழல் தீவிரவாதம். 1890 களில் பிரான்சில் தோன்றிய இந்த இயக்கம் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிற்குப் பரவி, முதலாம் உலகப் போருக்குப் பின் செல்வாக்கை இழந்தது.
English
The political ideology advocating better conditions and wages for workers and the elimination of state authority over economic organizations. It also advocated anarchy and revolution. The ideology developed in France in 1890 and spread throughout Europe and South America primarily in the trade union movement but lost influence at the beginning of World War I.