synergism
ஒருங்கியக்கம், கூட்டு இயக்க விளைவு, இணைவிணை
தமிழ் விளக்கம்
ஒருங்கியக்கம் (Synergy) என்பது வெவ்வேறு நிறுவனங்கள் ஓர் இறுதித் தீர்வுக்காக ஒத்துழைப்பதாகும். வெவ்வேறான நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்கள், தனித்தனியாக ஒரு குறிக்கோளை அடைய முயற்சிப்பதை விடக் குழுவாக ஒன்றிணைந்து முயற்சிக்கும் போது, சிறந்த விளைவை உருவாக்க முடியும் என்பதை இது குறிக்கிறது. இது ஆங்கிலத்தில் சினெர்ஜி (synergy) என்றழைக்கப்படுகிறது. இந்த வார்த்தையும், கருத்தாக்கமும் ஆர். பக்மின்ஸ்டர் புல்லரினால் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த syn-ergos - ஒன்றுபட்டுப் பணியாற்றுதல் என்ற கிரேக்க வார்த்தை மூலத்திலிருந்து எடுக்கப்பட்டது. சொல்லிலக்கண ரீதியாகக் கூறுவதானால், உண்மையில் இதையொரு கண்டுபிடிப்பு என்றே கூற வேண்டும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தனித்தனியான முயற்சியை விடச் சிறந்த அல்லது மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒருங்கியக்கம் மருந்தியலில், சிகிச்சை முறைகளில், பெருநிறுவனங்களில், வருவாய் மற்றும் செலவினங்களில், கணனிகளில், ஊடகத்துறையில், மனித வள மேம்பாட்டில், மானுட சேவை என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மனிதவள ஒருங்கியக்கம் மனிதர்களோடு தொடர்புள்ளது. இரண்டு நபர்களின் வெவ்வேறு சிறப்புத் திறமைகளை ஒருங்கிணைக்கும் போது பொதுவாக ஒருங்கியக்கம் உருவாகிறது. தொழிலில், நிறுவனத்தில் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளைப் பெற்றிருக்கும் பணியாளர்களின் கூட்டுறவில் மிகப் பொதுவாக ஒருங்கியக்கம் நிகழ்கிறது. மறுபுறம், உயர்ந்த ஒருங்கியத்தைக் உருவாக்க, அதற்கேற்ப குழுக்களை உருவாக்குவதற்காகவே ஒரு குறிப்பிட்ட துறையில் தங்களைத் தகுதிப்படுத்தி கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள்.
English
1. Cooperative effort by discrete organizations, social agencies, or subsystems that produces a more effective result than the sum of the output that could be achieved if the organizations acted independently. 2. The combined effect of two or more drugs that is greater than the total effect of each drug working alone. See also systems theories.