synergizing risk factors

அபாயக் காரணிகளை ஒருங்கிணைத்தல்

தமிழ் விளக்கம்

நோயை உருவாக்கும் காரணிகள் தனித்தனியாகச் செயல்படும் போது அதன் பாதிப்புகள் ஒரு அளவிற்குட்பட்டாதாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட காரணிகள் ஒன்றிணையும் போது ஆதனால் உருவாகும் கூட்டு விளைவுகள் அபாயகரமானதாகவும் இருக்கின்றதென்ற உண்மை. உதாரணமாக A என்ற தீநுண்மம் (வைரஸ்) 10% உயிரிழப்புகளை ஏற்படுத்தினால், B - என்ற தீநுண்மமும் 10% இழப்பை ஏற்படுத்துமென்றால், இரண்டும் இணையும் போது, இழப்புகள் மொத்தம் 20 சதவீதத்திற்குக் குறையாமல் இருக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் சில சமயங்களில் இது கணிசமாக அதிக அளவில் இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் ஒட்டுண்ணிகளின் கலவை ஒரு ஒருங்கியக்க விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒருங்கியக்கத்தின் எதிர்மறை விளைவுகள் பொருந்தாத தன்மையினால் உண்டாகின்றன. எரிச்சாராயம் மற்றும் வேலியம் (Valium) ஆகியவற்றை மனஅழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் போது, அவை மைய நரம்பு மண்டலத்தைப் (CNS) பாதிக்கின்றன. ஒவ்வொரு மருந்தின் தனித்தனி விளைவுகளை விட, இந்தக் கலவை ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில், இது சுவாச அழுத்தத்தை உருவாக்கும். இதற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும். தினந்தோறும் மது அருந்தாமல் ஒரு பாக்கெட் சிகரெட் மட்டும் புகைப்பவருக்கு, 52 % வாய்ப்புற்று நோய் வர வாய்ப்புள்ளதாகவும், புகை பிடிக்காத மது அருந்தாத ஒரு மனிதர், ஒரு பாக்கெட் சிகரெட்டும், ஒரு கோப்பை மதுவும் சில நாட்கள் தொடர்ச்சியாக உபயோகித்தால், அவருக்கு 400% வாய்ப்புற்று நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கணித்திருக்கின்றார்கள்

English

Multiplying the likelihood of contracting a disease by exposure to two or more factors which, by themselves, would not be as risky. For example, a person who smokes a pack of cigarettes a day and never drinks alcohol has a 52 percent higher risk of oral cancer than a person who does not smoke or drink, but if this person smoked one pack and had one drink per day, the risk would increase to 400 percent.