syphilis

கிரந்தி, மேகப்புண், வெட்டை நோய், பறங்கி வியாதி, இலிங்கவிரணம்

தமிழ் விளக்கம்

மேக நோய் / சிபிலிஸ் என்னும் நோய் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்ற Treponema Pallidum எனும் சுருளி வடிவம் கொண்ட அசையும் ஆற்றலுடைய பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோயானது பாலியல் நோயுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் கடத்தப்படுகிறது. பெண்ணுறுப்பு அல்லது ஆணுறுப்பின் மெல்லிய தோலினூடே இரத்தத்தில் நுழையும் நோயணுக்கள் இரத்தத்தின் வழியாகவும், லிம்ப் சிஸ்டத்தின் வழியாகவும் உடலெங்கும் பரவுகிறது. இரத்தக் குழாய்களே முக்கியமாக நோயின் பாதிப்புக்கு ஆட்படுகின்றன. இவ்வகைப் பாதிப்புள்ள நோயாளியுடன் உறவு கொண்ட ஒரு சில நாட்களில் இதன் அறிகுறிகள் தெரியவரும். சில நேரங்களில் கருவில் உள்ள சிசு பிறக்கும் போது குழந்தைக்குத் தாயிடம் இருந்து தொற்றடைந்த குருதியினாலும் தொற்றலாம். அதைப் பிறவி சிபிலிஸ் என்பர். மேகநோய் ஏற்படும் காலத்தையும், ஏற்படுத்தும் தாக்கத்தையும் கொண்டு, அதை முதன்மையான மேகநோய் (Primary Syphillis), துணையான (Second ary Syphillis) மற்றும் மூன்றாவது மேகநோய் (Tertiary Syphilis) என வகைப்படுத்தலாம். இதனுடைய அறிகுறிகள், சாதாரணத் தோல் வியாதியைப் போல காணப்பட்டு, பிறகு மறைந்து விடும். அதனால் இது பெரும்பாலும் அலட்சியப்படுத்தபடுகிறது. முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், சுமார் 30 ஆண்டு காலம், பல அறிகுறிகளை ஏற்படுத்தி, மறைந்திருந்து, உடல் உள் உறுப்புகளைத் தாக்கிய வண்ணம் இருக்கும். முற்றிய நிலையில் மரணம் நிச்சயம். ஆரம்ப கட்டங்களில் இதற்கு மருந்துகள் உண்டு.

English

A contagious venereal disease transmitted primarily by sexual contact and rarely by contact with an open wound or transmission of infected blood or plasma. Untreated, the disease causes lesions in subcutaneous tissue and internal organs and degeneration of the nerves, often causing blindness and psychosis. Treatment with penicillin has been effective in the early stages.