system

மண்டலம், அமைப்பு, தொகுதி, முறை, ஒழுங்குமுறை, நியமம், ஒருங்கியம், முறைமை

தமிழ் விளக்கம்

ஒருங்கிணைந்து ஒன்றித்து இயங்குவது ஒருங்கியம், ஒருங்கு என்றால் ஒன்று சேர்தல், ஒன்றாய் இருத்தல், ஒன்றுபட்டு இருத்தல். ஒருங்கே என்றால் ஒன்றாக. ஒருங்கிணைப்பு என்றால் எல்லாம் ஒன்றாய் ஒன்றில் இணந்து இருக்கச் செய்வது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாகச் சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல் / ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும் - ஒருங்கியம் (system) என்பது ஏதொன்றும் அதன் உறுப்புகளோடு சேர்ந்து, ஒருங்கிணைந்து, முழுவதுமாக சேர்ந்து இயங்கும் ஒன்று. எடுத்துக்காட்டாக மனிதரின் உடல் ஓர் ஒருங்கியம். உடலின் உறுப்புகள் (இதயம், நுரையீரல், குடல், கண், காது முதலியன) ஒன்றுடன் ஒன்று, பல்வேறு வகைகளில் தொடர்பும் உறவும் கொண்டு, உடல் என்னும் ஒன்றைச் சேர்ந்து இயக்குவதால் (இயங்குவதால்), உடல் ஓர் ஒருங்கியம் ஆகும். ஒருங்கியம் என்பது பருப்பொருட்களால் மட்டும் ஆனதாக இல்லாமல், கருத்துப்பொருளாகவும், நுண்புலமாகவும் (abstract) கூட இருக்கலாம். பல கருத்துப் பரப்புக்களைக் கொண்ட (Knowledge System) ஓர் அறிவுப் பரப்பையும் ஒருங்கியம் எனலாம். மேற்பட்டப் படிப்புக்காக ஒரு மாநிலத்தில் அமைக்கப்பட்ட பல பல்கலைக் கழகங்களையும் அவற்றின் இயக்கப்பாடுகளையும் ஒருசேர எண்ணும் பொழுது அவற்றைப் பல்கலைக்கழக ஒருங்கியம் எனலாம். எனவே ஒருங்கியம் என்பது ஒன்றின் உறுப்புகளும், அவை ஒருங்கிணைந்து, ஒன்று சேர்ந்து இயங்குதுமான ஒன்றாகும். ஒருங்கியம் என்பது அமைப்பு, அமையம், சமைதியம், முறை, முறைமை என்றும் சில சூழல்களில் அழைக்கப்படும். அறிவியல், பொறியியல், மருத்துவம், சமூகவியல் (குமுகவியல்) போன்ற பல அறிவுத்துறைகளில் ஒருங்கியம் என்னும் கருத்தும் அதன் பண்புகளும் விரிவாக அலசப்படுகின்றன. ஒருங்கியத்தின் பொதுவான பண்பியல்புகளைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம்: 1. ஒருங்கியம் என்பது உண்மையில் உள்ள ஒன்றின் கருத்தளவிலான உருவகம். நுண்புல கருத்துருவாக்கம். 2. ஒருங்கியம் என்பது தனக்கென ஓர் உள்கட்டமைப்பும் உறுப்புகளும் உறவுகளும் கொண்டிருக்கும். 3. ஒருங்கியம் என்பது தனக்கென ஓர் இயக்கப்பாடு, நடத்தை, இயங்குமுறை கொண்டிருக்கும் 4. ஒருங்கியம் என்பது தன்னைச் சூழ்ந்துள்ள சூழகத்துடன், பல வகைகளில் ஆற்றல், பொருள் போன்றவற்றை கொடுக்கல்-வாங்கல் உறவுகளுடன் இயங்கும்.

English

A combination of elements with mutual reciprocity and identifiable boundaries that form a complex or unitary whole. Systems may be physical and mechanical, living and social, or combinations of these. Examples of social systems include individual families, groups, a specific social welfare agency, or a nation's entire organizational process of education.