systematic desensitization

முறையாக உணர்திறன் குறைப்பு / உணர்வு நீக்கம், படிப்படியாக உணர்வழித்தல்

தமிழ் விளக்கம்

ஒரு பொருளோடோ, நிகழ்வோடோ சம்மந்தப்பட்ட பயத்தையும், பதட்டத்தையும் படிப்படியாகாக் குறைக்க ஜோசப் உல்ப் என்ற உளமருத்துவர் கையாண்ட அணுகுமுறை. அச்சம், பதட்டம் தரும் நிகழ்வுகளோடு படிப்படியாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும், பதட்டத் தனிப்புப் பயிற்சிகளையும் ஒருசேர அறிமுகப்படுத்தி, பயத்திலிருந்து விடுவிப்பது. எடுத்துக்காட்டாக நாயைக் கண்டு பயக்கும் ஒருவருக்கு உரோமம் படிந்த தோலைக் காட்டுவது, பின் அதன் கூறிய நகங்களைக் காட்டுவது, அதன் வாய் பற்களைக் காட்டுவது, அதன் குறைப்பு சத்தத்தைக் கேட்க வைப்பது போன்ற படிநிலைப் பயிற்சிகளோடு, உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை இணைந்தே வழங்கும் போது, பய உணர்வு படிப்படியாகக் குறைந்து, நாயைப் பார்க்கும் போது இயல்பு நிலையை அடைய உதவும்.
பார்க்க: desensitization - உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்தல், சமூகப் பணியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையற்ற பயத்தையோ, பயனற்ற நடத்தையையோ போக்க அவர்கள் எந்த எண்ணங்களால், நடத்தைகளால் அவ்வாறு தூண்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதை நீக்குதல் அல்லது குறைத்தல்.

English

A behavior modification technique, designed by Joseph Wolpe in the 1950s, that gradually alleviates the fear and anxiety associated with an object or event. Using relaxation exercises and imagery relaxation technique, the client is exposed to stimuli from a gradation of anxiety-provoking situations. For example, if a client is afraid of heights of more than six feet, the social worker might encourage the client to stand on the lowest rung of a stepladder while thinking of some pleasant experiences long enough for anxiety to end at that level. This process would be repeated slowly until the client is comfortable at levels higher than six feet. Systematic Multiple-Level Observation of