systems theories

அமைப்பியல் கோட்பாடு, ஒருங்கியக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

ஒன்றுக்கு மேற்பட்ட இடைத் தொடர்புகளையுடைய அம்சங்களுடன் சேர்ந்து இயங்குபவை தொகுதி (ஒருங்கியம்) எனப்படுகின்றது. தொகுதி என்பது பருப்பொருட்களால் ஆனது மட்டுமல்லாமல், கருத்துப்பொருளாகவும், நுண்பொருட்களாகவும் கூட இருக்கலாம். தொகுதியானது தனக்கென ஓர் உள்கட்டமைப்பு, உறுப்புகள், தொடர்புகள், இயக்கப்பாடு. நடத்தை இயங்குமுறை என்பவற்றைக் கொண்டிருப்பதுடன், தன்னைச் சூழ்ந்துள்ள சூழலுடன் ஏதேனும் வகையில் பரிமாற்றத்தைக் (கொடுக்கல் - வாங்கல்) கொண்டனவாகவும் காணப்படும். எப்படி ஒரு அமைப்பின் அல்லது ஒருங்கியத்தின் கூறுகள் அமைகின்றன என்பதையும், அவற்றுக்கிடையான பொருத்தப்பாடு மற்றும் தொடர்புகளையும் விளக்க ஒருங்கியக் கோட்பாடுகள் உதவுகின்றன. அறிவியல், பொறியியல், மருத்துவம், சமூகவியல் (குமுகவியல்) போன்ற பல அறிவுத்துறைகளில் ஒருங்கியம் என்னும் கருத்தும் அதன் பண்புகளும் விரிவாக அலசப்படுகின்றன.

English

Those concepts that emphasize reciprocal relationships between the elements that constitute a whole. These concepts also emphasize the relationships among individuals, groups, organizations, or communities and mutually influencing factors in the environment. Systems theories focus on the interrelationships of elements in nature, encompassing physics, chemistry, biology, and social relationships. See also general systems theory, ecological perspective, life model, and ecosystems perspective.