T-group
பயிற்சிக் குழுக்கள்
தமிழ் விளக்கம்
T group என்பது Training Group (பயிற்சிக் குழு) என்பதன் சுருக்கம். இது உணர்திறன் பயிற்சிக் குழுக்கள், மனித உறவுப் பயிற்சிக் குழுக்கள், குறிப்பிட்ட பிரச்சனைக்களை எதிர்கொள்ளும் குழுக்கள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் திறனை குழுச் சூழலில் வளர்த்தெடுக்கவும், பணி மற்றும் இலக்கு ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்கவும், புதுமையாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பு மூலமாக பணியாளர்களிடையே தொடர்புகளை / உறவுகளை வலுப்படுத்தி உற்பத்தி திறன் மேம்படவும் கையாளப்படும் நிர்வாக உத்தியாக கையாளப்படுகிறது. இந்த மாதிரியான பயிற்சிக் குழுக்கள், 8 லிருந்து 15 வரையுள்ள உறுப்பினர்களைக் கொண்டு, தங்களுடைய அனுபவப் பரிமாற்றத்தின் மூலம், பிரச்சனைகளையும் ஆதற்கான காரணங்களையும் இனங்கண்டறிந்து தீர்க்க முயல்கிறது. பின்னூட்டம் இடுதல், வகிபாக ஒத்திகை (role play), செயல்முறை ஆலோசனை (process consultation) போன்றவற்றின் மூலம் குழு உறுப்பினர்கள் தங்களையும் பிறரையும், பிற குழுக்களையும் புரிந்துகொண்டு செயல்பட இக்குழுக்கள் முயல்கின்றன.
English
A training group, often made up of people who work together in one organization, that emphasizes communication, self-development, and cooperative problem solving. Some T-groups are structured, whereas others are unstructured to encourage the members to learn by experience how to be more effective in interpersonal relationships.