taboo
முறையற்றது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமூகம் தடை செய்திருக்கும் விசயங்கள், சமுதாயத்தைக் கெடுக்கும் பழக்கங்கள், சமுதாயத்திற்குத் தேவையற்ற பழக்கங்கள், தடைக்கட்டு, சமூக விலக்கு, மூட நம்பிக்கை, மதக்கட்டுப்பாடு, சமுகக் கட்டுப்பாடு, சமூகத் தடை
தமிழ் விளக்கம்
புனிதமானதென்றோ, சபிக்கப்பட்டதென்றோ சில நடத்தைகளை, மனிதர்களை, சம்பவங்களை, பொருட்களைப் பார்ப்பதிலிருந்து, தொடுவதிலிருந்து, தொடர்பு கொள்வதிருந்து தடை செய்வது. பெரும்பாலான சமூகங்களில் நெருங்கிய உறவினரிடையேயான பாலுறவிற்குத் தடை (incest), தன்னின ஊன் உண்ணுதல் / நரமாமிசம் உண்ணும் பழக்கம் (cannibalism), கொலை போன்ற செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. சில நேரங்களில் ஒரு கலாச்சாரத்தில், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் பழக்கங்களுக்குப் பிற கலாச்சாரங்களில் / சமூகங்களில் தடை விதிக்கப்படுவதுமுண்டு.
English
A behavior or other entity that is prohibited by a cultural group. Every group teaches its members that certain actions, objects, persons, and words are not to be condoned. Although most societies have taboos against incest, cannibalism, and murder, each culture develops prohibitions against some behaviors that are acceptable in other cultures and subcultural groups. Some anthropologists use the alternative spelling "tabu."