tabula rasa

எழுதாப் பலகை

தமிழ் விளக்கம்

அறிவு நெறியியலின்படி மனிதர்கள் பிறக்கும்போது எந்தவித உள்ளமைக்கப்பட்ட மன உள்ளடக்கமின்றி பிறப்பதாகவும், அறிவு என்பது அதன் பின் கற்றுக்கொள்வதேயாகும் என்று சொல்லும் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டாளர்கள் மனிதர்களில் சிலர் 'திருவுடன்' பிறப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனிதப் பண்புகள் மற்றும் ஆற்றல்கள் எல்லாம் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவையே என்று நம்புகிறார்கள். மனித மனது என்பது ஒரு எழுதாப்பலகையே. சமூகப்பணியாளர்கள் பாரபட்சமற்ற தன்மையைக் குறிக்க இந்த வார்த்தைப் பதத்தை உபயோகிப்பர். இதை பூர்வீகப் பெருமை பேசுவதற்கு நேரெதிராகச் சித்தரிப்பார்.
பூர்வீகப் பெருமை / பற்று, அகநிலைக் கருத்துக்கோட்பாடு, திணைக்குடியாதரவுக் கோட்பாடு - 1. பூர்விகக் கலாச்சாரங்களே மேலானதென்று பிற கலாச்சாரங்களை உள்வாங்காமலிருப்பது. 2. சில ஆளுமைப்பண்புகள் பிறக்கும் போதே மரபு ரீதியாக பெறப்படுகிறது என்ற கருத்து. இது எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் தொடங்குவது (tabula rasa) என்பதிலிருந்து வேறுபட்டது. 3. புலம் பெயர்ந்து வருபவர்களால் பூர்வீகக் குடியினருக்கு வாய்ப்புக்கள் குறைவதையெண்ணி, புலம் பெயர்தலையும், அந்நிய நாட்டினருக்குக் குடியுரிமை வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவர முயற்சிப்பது.

English

The mind before it has any experience; a "clean slate." The term is used by social workers to convey approaching something or someone without prejudice, that is, with a completely open mind; it also suggests that the way we think and behave is because of our various cultures rather than because of some inherent quality or instinct. This concept is the opposite of nativism.