tachycardia
இதயத் துடிப்பு மிகைப்பு, மிகை இதயத் துடிப்பு, இதயவிரைவடிப்பு, வேகமான இதயத் துடிப்பு, இதயத்துடிப்புக் கோளாறு, துரத்து விரைவிதயம்
தமிழ் விளக்கம்
சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.
90 க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள். உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும் மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல் காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்பு அதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும் போதும், பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகித் தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு குறையும்.

English
Excessively rapid heartbeat.