tactics of influence

செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் தந்திரங்கள், வாய்மானியம் பண்ணுதல், அதிகார வழிகள்

தமிழ் விளக்கம்

சமுதாயப் பணியாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் ஒரு கொள்கை, திட்டம் அல்லது மாற்றத்தை சம்பந்தப்பட்டவர்களை ஏற்றொழுகக் கையாளும் உத்திகள் / தந்திரோபாயங்கள். ஒரு தேவையை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசுவது, அதைப்பற்றிய தகவல்களைச் சேகரிப்பது, பிரச்சனையின் தன்மையைப் பொறுத்து சார்பு நிலை எடுப்பது (யாருக்கு / எதற்கு ஆதரவளிப்பது), ஊடகங்கள் மூலமாக பரப்புரை செய்வது, நிபுணர்களின் சான்றுகளைத் திரட்டுவது, அரசியலனைவை நாடுவது, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது.
பார்க்க: legislative advocacy tactics. - சட்டமன்ற நடவடிக்கைகளிலும், சட்டமியற்றலிலும் தலையிட்டு தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்தவோ, திருத்தங்கள் செய்யவோ, சட்டமியற்றுவதை தடுக்கவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சட்டபூர்வமான ஆதரவு அல்லது எதிர்ப்பு உத்திகள் எனலாம். இதற்கென சமூகப்பணியாளர்கள், சட்டநடவடிக்கை குழுக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தங்கள் நோக்கங்களை அடைய அரசியல் செல்வாக்கை (அரசியல் தரகர் - Lobbyist) பயன்படுத்துவோர் கையாளும் ஏழு உத்திகளை ரொனால்ட் மற்றும் ரினோ (Ronald B. Dear & Rino J. Patti) என்ற இரு சமூகப்பணிக் கல்வியாளர்கள் விளக்கி உள்ளனர். அவையாவன: 1.தாங்கள் விரும்பும் சட்ட வரைவை (மசோதா) சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவே பரப்புரை செய்வது. 2. தனி நபர் மசோதாவாக அல்லாமல் பலஉறுப்பினர்கள் / பலநிறுவனங்கள் ஆதரவு தரும் மசோதாவாக அதை விரிவாக்கிக் கொள்வது 3. பெரும்பான்மை அல்லது ஆளும் கட்சியைச் சார்ந்த முக்கிய நபர் அந்த மசோதாவை ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்குவது 4. மசோதாவின் பேசுபொருள் தொடர்பான சட்டமன்ற குழு இருக்கும் பட்சத்தில் அக்குழுத் தலைவரை அந்த மசோதாவிற்கு ஆதரவு தர சம்மதிக்க வைத்து அவரைக்கொண்டே மசோதாவை அறிமுகம் செய்யவைப்பது 5. அந்த மசோதாவிற்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கண்டறிந்து அவர்களின் எதிர்ப்பை நீர்த்துப் போக வைப்பது 6. அந்த மசோதாவிற்கு ஆதரவாக பொதுவிவாதத்தை உருவாக்கி அதன் முக்கியத்துவம் பற்றி பலரையும் பேசவைப்பது 7. அந்த மசோதாவில் தேவையான திருத்தங்கள் கோரப்பட்டால் அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வது. இதுதவிர அந்த மசோதாவின் பேசுபொருள் குறித்து தெளிவான விளக்கங்களையும், அந்த மசோதாவினால் ஏற்படும் செலவினங்களையும்,, அதனால் ஏற்படும் பயன்விளைவுகளையும் பலரும் புரிந்துகொள்ளும்படி ஏற்பாடு செய்வது. இது பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் ஆதரவு தர வழி வகுக்கும்.

English

Activities of community organizers, social activists, and other social workers to encourage adoption of one policy over another. Some actions include holding case conferences with individuals and organizations to determine needs and needs provision, gathering facts, taking advocacy positions, convening and participating in committees, petitioning, media campaigning, providing expert testimony, working as lobbyists, bargaining, organizing a demonstration, initiating or coordinating a class action suit, and engaging in disruptive tactics. See also tactics, strategies, and legislative advocacy tactics.