Taft, Jessie (1882-1960)

டாஃப்ட், ஜெஸ்ஸி (1882-1960)

தமிழ் விளக்கம்

டாஃப்ட், ஜெஸ்ஸி (1882-1960) - சமூகப்பணிக் கல்வியாளர் மற்றும் சமூகத் தனியாள் பணியைத் தன்னுடைய பயிற்சியினாலும், முன்மாதிரியாலும், தத்துவ விளக்கத்தாலும் செழுமைப்படுத்தியவர். பென்சில்வேனியா பல்கலைக் கழக சமூகப்பணித்துறையில் பேராசிரியர்களாகப் பணியாற்றிய விர்ஜீனியா ராபின்சன் மற்றும் ஜெஸ்ஸி டாஃப்ட் (Virginia Robinson & Jessie Taft) ஆகியோர் அங்கே பணிபுரிந்த உளபகுப்பாய்வு பேராசிரியர் ஒட்டோ ரேங்க் (Otto Rank ) உடன் இணைந்து உருவாக்கிய செயல் சார்ந்த சமூகப் பணி அணுகுமுறை, பிராய்ட் பரிந்துரைத்த பிரச்சனையின் விரிவான வரலாறு, நோயறிதல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், ஒரு சமூகப் பணியாளரோ, சமூக சேவை நிறுவனமோ ஒரு பிரச்சனைக்கான தீர்வில் எப்படி பரீட்சார்த்தமாகச் செயல்பட்டு அதைத் தீர்க்கலாம் என்ற செயல்சார்ந்த வழிமுறைகளைக் கையாண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவியது.

English

Social work educator and casework practitioner who developed the functional school in social work with her colleague Virginia Robinson and integrated the theories of psychoanalyst Otto Rank (1884-1937) into the social work curriculum. Her best known book is A Functional Approach to Social Casework (1944).