tagger

சுவற்றில் கிறுக்கிச் செல்பவன், சுவற்றில் குறிப்புகள் எழுதுபவன்

தமிழ் விளக்கம்

பார்வையில் படும் நகரக்கட்டிடங்களின் சுவர்களிலும், பெயர்ப் பலகைகளிலும், பேருந்துகள் மற்றும் புகைவண்டிகளிலும், நீர்த் தொட்டிகளிலும் வண்ணங்களால் கிறுக்கி தங்களின் அடையாளக் குறி வைப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தெருக்கும்பல்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் சுவற்றில் குறி வைப்பதும் கூட மறைமுகமாக இந்த பகுதி குறிப்பிட்ட கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று குறிப்பதற்கேயாகும்.

English

A graffiti "artist" who uses spray paint cans and other marking devices on large highly visible surfaces, such as urban buildings, street signs, commuter trains, bridges, and water towers. Many "taggers" are members of street gangs and mark property to proclaim their gang's turf.