taijin kyofusho
தன்னுடல் பற்றிய தாழ்வு மனப்பான்மை
தமிழ் விளக்கம்
தன்னுடைய உடலைப் பற்றியும், அதில் தோன்றும் அறிகுறிகளைக் குறித்தும் அதீத கற்பனை செய்து மருளும் கோளாறு. உண்மை போன்று தோன்றும் இம்மருட்சி பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். தன்னுடைய உடலுறுப்புகள் அளவானதாக சமச்சீராக இல்லையென்றும், உடலுக்குள் ஒட்டுண்ணிப் புழுக்கள் ஊறுவதாகவும், காதுக்குள் பூச்சிகள் ரீங்காரமிடுவதாகவும், உடம்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உண்மையிலே நம்பும் மனநிலை.
English
A culture-bound syndrome found most commonly in Japan in which an individual experiences intense fear of being offensive to others through physical appearance, body odors, or gestures. See also somatic-type delusional disorder.