taking the fifth

விசாரணையின் போது மவுனம் சாதிப்பது, அரசியல் நிர்ணயச் சட்டத்தின் ஐந்தாவது திருத்தத்தை பின்பற்றுதல்

தமிழ் விளக்கம்

காவல் துறையினரின் மிரட்டலுக்குப் பயந்து ஒருவர் தன்செயலால் தானே குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்ளாமலிருக்க, அமெரிக்க அரசியல் நிர்ணயச் சட்டத்தின் ஐந்தாவது திருத்தம், காவல் துறை விசாரணையின் போது மவுனமாயிருக்க உரிமை வழங்கியுள்ளது.
மிராண்டா Vs அரிசோனா வழக்கு, மிரண்டா உரிமைகள் - ஒரு பெண்குழந்தையைக் கற்பழித்துக் கொன்றதாக எர்ணஸ்டோ மிரண்டா (Ernesto Miranda) என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் பெற்று, காவல் துறை நீதிமன்றத்தில் அறிக்கையிட்டது. மிராண்டாவின் வழக்கறிஞர் அது மிரட்டி வாங்கப்பட்டது என்று வாதாடியும், கீழ்நீதிமன்றம் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் மிராண்டா விசாரணையின் போது மௌனம் காக்க உரிமை படைத்தவர் என்று தெரியாததாலும், அவர் தன் சார்பில் வாதாட ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளாலாம் என்று தெரியாததாலும், காவல்துறை அவர் அறியாமையைப் பயன்படுத்தி வாக்குமூலம் பெற்றதாகக் கூறிய போது, விசாரணைக் கைதிகளின் உரிமைகள் பற்றி நீதிமன்றம் விளக்கமளித்தது. அதன்படி கைதி ஒருவர் வழக்கறிஞர் ஒருவரை விசாரணையின் போது வைத்துக் கொள்ளலாமென்றும், விசாரணையின் போது குற்றவாளி மௌனம் சாதிக்க உரிமைபடைத்தவர் என்றும் சொன்னது. விசாரணைக் கைதிகளின் உரிமைகள் பற்றி விசாரணைக் கைதிகளுக்கு காவல்துறை விளக்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

English

Refusing to answer questions asked by law authorities by exercising the U.S. Constitution's Fifth Amendment rights against self-incrimination. See also Miranda.