TANF
உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவி
தமிழ் விளக்கம்
இது அமெரிக்க மைய அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் சமூக நலத் திட்டம். வளரும், பள்ளிசெல்லும் நிலையிலுள்ள ஆசீரத (dependent சார்ந்துள்ள) குழந்தைகளைக் கொண்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நேரடியான பண உதவி. இது தேர்ந்தெடுக்கப்படும் குடும்பங்களுக்கு நிரந்தரமாக உதவியை வழங்காமல், 60 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். குறிப்பிட்ட வருமானத்திற்கு குறைவாக வருமானமீட்டும் குடும்பங்களுக்கு உதவி அளிக்கப்படும். வருமான உச்ச வரம்பைத் தாண்டும் போது உதவி நிறுத்தப்படும்.
English
The popular designation, pronounced "tanif," for Temporary Assistance to Needy Families (TANF).