Tarasoff decision

டெராசப் தீர்ப்பு, ஒரு மனநோயாளி ஆபத்தானவர் என்று அவரைச் சுற்றியுள்ளவர்களை எச்சரிக்கும் கடமை மனநல மருத்துவர்களுக்கு உண்டென்பதைச் சொல்லும் சட்டவிதிமுறை

தமிழ் விளக்கம்

கலிபோர்னியா பல்கழைக்கழக (பெர்க்லி) மாணவரான புரஞ்சித் போதர் (Prosenjit Poddar) என்ற இந்திய (வங்காளம்) மாணவர், தாதன்யா டெராசப் (Tatiana Tarasoff) என்ற மாணவியின் மீது காதல்கொள்ள, அவரின் காதல் நிராகரிக்கப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த போதர் மனச் சிதைவு நோய்க்கு ஆளாகிறார். சிகிச்சையின் போது, தான் தாதன்யா டெராசப்பை தீர்த்துக்கட்டினால்தான் தன் மனம் நிம்மதியடையும் என்று கூற, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் (Dr. Lawrence Moore) பலகலைக் கழக காவல் நிலையத்தில் தெரிவிக்க சிறையில் அடைக்கப்படுகிறார். விடுதலையான பின், அந்த மாணவியின் சகோதரருடன் நட்பாகி, அதன்மூலம் மீண்டும் தாதன்யா டெராசப்பை நெருங்கி அவரைக் கொன்று விடுகிறார். கொலைக்கான தண்டனை பெற்ற போதர், மனச் சிதைவு நோயாளி என்று அறிந்து விடுதலை செய்யப்பட்டு இந்தியா திரும்ப உத்தரவாகிறது. இந்த தீர்ப்பில் மன நோயாளிகளின் தன்மை பற்றி சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டிய பொறுப்பு மனநோய் மருத்துவர்களுக்கு இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

English

The 1976 ruling by the Supreme Court of California (Tarasoff v. Regents of the University of California) stating that, under certain circumstances, psychotherapists whose clients tell them that they intend to harm someone have a duty to warn the intended victim. Subsequently, this decision has been upheld in many other states. Some social workers have argued that the effect of the ruling is to make it more difficult for therapists to assure their clients of confidentiality and for clients to express certain hostile feelings to their therapists. Others argue that the effect of the ruling is to save the lives of innocent people. See also relative confidentiality, code of ethics, Jaffe v. Redmond decision, and Ramona decision.