tardive dyskinesia (TD)

உடலை அசைப்பதில் ஏற்படும் இடர்ப்பாடு

தமிழ் விளக்கம்

இது மருந்துகளின் பக்கவிளைவால், குறிப்பாக உளப்பிணி நீக்கிகள், பதட்டமடக்கிகள், போன்ற மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாதபடி உடலின் பல பாகங்களிலும் ஏற்படும் நடுக்க உணர்வு.
அசைவிழப்பு, இயக்கக்கேடு, விருப்பப்படி உடலை அசைப்பதில் இடர்ப்பாடு - அசைவிழப்பு அல்லது இயக்கக்கேடு அல்லது விருப்பப்படி உடலை அசைப்பதில் இடர்ப்பாடு ஏற்படுதல் என்பது அனிச்சைத் தசைகளில் (involuntary muscle movements) ஏற்படும் நடுக்கம், நடனம் போன்ற தசை வலிப்புகள் அதிகமாகி இச்சை தசைகளின் (voluntary muscle movements) செயல்பாடு குறையும் நிலை எனலாம். சாதாரண உடல்நடுக்கம் தொடங்கி, இடுப்புக்கு மேலோ, கழுத்துக்கு மேலோ அல்லது இடுப்புக்கு கீழோ உடல் தன்னிச்சையாக நடுங்கும் நிலை. இந்த நடுக்கம் உடலின் உள்ளுருப்புகளிலும் நிகழலாம். இது பல காரணங்களால் உண்டாகும் சீர்கேடாகும்.

English

A medicationinduced movement disorder including abnormal and uncontrollable physical movements, especially of the mouth, lips, and tongue, and sometimes repetitive movements of the head, hands, and feet. This is seen in many clients who have used antipsychotic drugs over time.