target behavior

மாற்றப்படவேண்டிய / மேம்படுத்தப்படவேண்டிய நடத்தை

தமிழ் விளக்கம்

மாற்றப்படவேண்டிய அல்லது மேம்படுத்தப்படவேண்டிய நடத்தைகளை அடையாளம் கண்டு, அது எப்போது, எந்தத் தூண்டுதலால் நடக்கிறது, அதை எப்படி மாற்றவேண்டும் அல்லது மேம்படுத்தவேண்டும் எனத் திட்டமிடுவது. பள்ளிக்குச் செல்லாத ஒரு மாணவனின் நடத்தை மாற்றத்திற்கு சமூகப் பணியாளர் முயலும் போது, முதலில் அந்த நடத்தையைப் பற்றிய விளக்கம் தேவைப்படும். ------------ பெயருள்ள மாணவர் சராசரியாக, வாரத்தில் இரண்டு நாட்கள் எனக் கடந்த ஆறு மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை என்று தெரிய வரும்போது, அதற்குக் காரணமான எந்த நடத்தை மாற்றப்படவேண்டுமென்று விரும்புகிறோமோ அந்த நடத்தையின் காரண காரியங்களை ஆராய்ந்து, அதை விளங்க வைத்து முடிவெடுக்க உதவவேண்டும்.

English

In behavior modification, the behavior or behaviors selected for analysis or modification. Identifying the target behaviors is the first step in the therapist's behavioral assessment. This includes delineating the specific behaviors and the time and conditions in which they occur. For example, a social worker would list a target behavior for a youngster who frequently skips school as follows: "Student was absent from school an average of two times per week during the past two months." See also unit of attention.