target of intervention
தலையிடுவதற்கான இலக்கு, அக்கறை காட்டுவதற்கான இலக்கு, பரிந்துரைப்பதற்கான இலக்கு
தமிழ் விளக்கம்
intervention என்கிற ஆங்கில வார்த்தையை தலையிடுதல் அல்லது இடைநிற்றல் அல்லது குறுக்கிடுதல் என்று ஓரர்த்ததுடன், தடையாக, விரிவற்ற முறையில் மொழிபெயர்ப்பது / பொருள் கொள்வதென்பது, சமூகப்பணியிலும், பிற மானுட சேவைத் துறைகளிலும் அது விரிவான பொருளில் பயன்படுத்தபடும் முறையைப் பிரதிபலிக்காது. சமூகப்பணியாளர்களின் பணித்தன்மையை, செயல்முறைகளைக் கவனித்தால், பல செயல்களை உள்ளடக்கிய விரிவான பொருளில் intervention என்ற சொல் பயன்படுத்தப்படுவதை உணரலாம். அதை இடையிட்டுப் பரிந்து பேசுதல், பரிந்தாதரித்து வேண்டுதல், சமூகப் பிரச்சனைகள் மீது அக்கறை / அறிவைச் (தலையிடுதல்) செலுத்துதல், ஈடுபாடு காட்டல், முகமலர்ந்து இனிய கூறுதல், கருணையோடு நோக்குதல், தலையளி செய்தல் (வரியவர்களிடமும், எளியோரிடமும் இரக்கம் காட்டல்), நன்மையை வளர்த்தல், (தீயதை) தாமதப்படுத்தல், அருள்செய்தல், போன்ற செயல்களைப் பிரதிநிதிபடுத்தும் பொருளிலும் பயன்படுத்துகின்றனர்.
English
In social work practice, that which is to be changed so that the problems presented or recognized by the client, the client system, or the social worker can be solved or mitigated.