target segments of society

குறியிலக்க சமூகப் பிரிவுகள்

தமிழ் விளக்கம்

ஏதாவதொரு பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் என்று சமூகத் திட்டமிடுபவர்களாலும், சமூகக் கொள்கை வடிவமைப்பாளர்களாலும் தேர்வு செய்யப்பட்டு, பிரத்யேக அல்லது சிறப்பு கவனத்திற்கு உள்ளாக்கப்படும் மக்கள் அல்லது குழுக்கள். எடுத்துக்காட்டாக எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தில் நீண்ட தூரம் சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் குறியிலக்க குழுக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆணுறைகளும், விழிப்புணர்வும் கொடுக்கப்படுகிறது.

English

In social planning and policy development, a category of people who are deemed most vulnerable to a given social problem or who are given special attention in efforts to find solutions or enhanced well-being. For example, a target segment might be all American mothers, everyone who is functionally illiterate, or all residents of Tacoma, Washington. See also unit of attention.