tariff

கட்டணம்

தமிழ் விளக்கம்

ஒரு நாட்டின் வியாபாரம், உற்பத்தி, தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை பிற பிராந்தியங்களின் அல்லது நாடுகளின் போட்டியிலிருந்து சமாளிக்கப் போடப்படும் வரிகள். கட்டணம் என்பது பொதுச் சொல்லாடல். பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதி வரி, கேளிக்கை வரி, விற்பனை வரி, சுங்க வரி, கலால் வரி.
மையஅரசு வரிகள்: சிறப்பு தீர்வைகள், ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வைகள். (மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிப்பது கலால்வரி.)
மாநில அரசு வரிகள்: தொழில், வணிகம், வேலை மீதான வரிகள், விற்பனை வரி, கேளிக்கை வரி, மோட்டார் வாகன வரி, வேளாண்மை வரி.
(மாநில அரசுக்கு அதிக வருவாய் தருவது விற்பனை வரி) ஆக்ட்ராய் வரி - நகருக்குள் வரும் பொருட்கள் மீது நகராட்சி விதிப்பது.
VAT (Value Added Tax) : மதிப்பு கூட்டப்பட்ட வரி. ஒரு பொருளின் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி.
MODVAT: ஏற்றுமதியாளர்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவுவது.

English

A tax levied on imports to help protect a nation's or a community's business, labor, or agriculture from outside competition.