Tavistock group

தவிஸ்டோக் குழு

தமிழ் விளக்கம்

வில்பிரெட் பையான் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயர். பின்னாளில் இவர் உலகப் புகழ்பெற்ற மனநல மருத்துவரானார். மனப்பிறழ்வுக்கான குழுச் சிகிச்சையின் போது, குழு பங்கேற்பாளர்களின் உணர்வெழுச்சிப் பெயர்ச்சியை (Transference உணர்வெழுச்சி இடமாற்றீடு), ஒரு பார்வையாளராக மட்டும் பார்த்து, குழுச் செயல்பாடுகளில் தலையிடாமல் விளக்கமளிப்பதன் மூலம் குழு உறுப்பினர்கள் (பங்கேற்பாளர்கள்) உட்தெளிவு பெற உதவும் உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர்.

English

A type of psychoanalytically oriented group psychotherapy, originated in 1944 by Wilfred Bion at the Tavistock Clinic in Great Britain, in which the group therapist assumes an apparently passive, almost bystander, role and makes interpretations only to the whole group. A major goal is for members to attain insight into the transference reactions that emerge.