tax
வரி
தமிழ் விளக்கம்
வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அதிகாரமுள்ள அமைப்புகளோ, தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றவும், அதற்கான நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டவும், தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து சட்டப்படி வசூலிக்கும் நிதி அறவீடு ஆகும்.
பார்க்க: regressive tax - பிற்போக்குத்தனமான வரிவிதிப்பு முறை - அரசின் வரிவிதிப்பு முறைகளில் வருமானத்தின் அளவு எப்படியிருந்தாலும், எல்லோரும் சமமான அளவு பாரபட்சமின்றி, 10 சதவீதமோ அல்லது 20 சதவீதமோ வரி கட்டவேண்டும் என்ற நடைமுறை. இது proportional tax எனப்படும் விகிதாச்சார வரி விகிதம். இதற்கு மாறாக வருமான வரம்பு உயரும் போது அதற்கேற்ப கூடுதல் வரிகட்ட வேண்டும் என்ற எறு வரிமுறை. 1000 ஆயிரம் வருமானமீட்டுபவர்கள் 5 சதவீத (500 ரூபாய்) வரியும் 20000 வருமானமீட்டுபவர்கள் 10 சதவீத (2000 ரூபாய்) வரியும், 30000 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் 15 சதவீத (4500 ரூபாய்) வரியும் கட்டவேண்டுமென்ற ஏறுவரி நடைமுறை. இதற்கு மாற்றாக விற்பனை வரி செலுத்துவதில், 1000 ரூபாய்க்கு பொருளை வாங்குபவர் 1 சதவீதம் விற்பனை வரி (100 ரூபாய்) செலுத்துகிறார் என்றால், அதே 1 சதவீத வரியை, 30000 ஆயிரம் வருமானமீட்டுபவரும் கட்டும்போது, அவர் செலுத்தும் விற்பனை வரி, அவருடைய வருமானத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே. இது 1000 ரூபாய் வருமானமீட்டுபவர் கட்டும் வரியை விட மிகக் குறைவானது. இது பிற்போக்குத்தனமான வரிவிதிப்பு முறை என்று கருதப்படுகிறது.
progressive tax - ஏறு வரி, வளர்வீத வரிமுறை, முற்போக்கான வரி, வருமானத்திற்கேற்ற வரி - ஒருவரின் வருமான அளவிற்கேற்ப அவரின் வருமான வரியை உயர்த்துவது.
sin tax - பாவ வரி, கேளிக்கை வரி - வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் நிதி ஆகும். வரி வசூலிக்கும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் வசூலிக்கும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இந்த மாதிரி வசூலிக்கும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி வசூலிப்பதுண்டு. அரசு பலவிதமான வரிகளை வசூலிக்கின்றது. உற்பத்தி / கலால் வரி, ஏற்றுமதி - இறக்குமதி /சுங்க வரி, கேளிக்கை வரி, செல்வ வரி, சேவை வரி, தீர்வை, நிறுவன வரி, பலகணி வரி, மதிப்புக் கூட்டு வரி, மரண வரி, மறைமுக வரி, மின் வரி, வருமான வரி, விற்பனை வரி என்று அரசு பலவிதமான வரிகளை வசூலிக்கின்றது. சில பொருட்களின் முக்கியத்துவம் மற்றும் பயன் கருதி, குறைவான வரியோ அல்லது வரி விலக்கோ அரசு அளிக்கலாம். சில பொருட்களின் உற்பத்தியும், சில சேவைகளும் அவ்வளவு அத்தியாவசியமில்லை, அதனுடைய பயன்பாடு மக்களுக்கும், சமூகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்றோ, தீங்கு விளைவிக்கும் என்றோ அரசு கருதும் பட்சத்தில் அதன் உற்பத்தியைத் தடைசெய்யாமல், அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அதிகமாக வரி விதித்து, அதையொட்டி அதன் விலையைக் கூட்டுவதன் மூலம், மக்களின் பெருவாரிப் பயன்பாட்டிலிருந்து அதைக் குறைக்கலாம் என்று சில பொருட்களுக்கும், சேவைகளுக்கும், அதன் உற்பத்தி விலையைக் கருத்தில் கொள்ளாது அதிகமாக வரி விதிக்கும். எடுத்துக்காட்டாக புகையிலை, மதுபானங்கள் போன்ற பொருட்கள் மக்களின் ஆரோக்கியக் கேட்டிற்கு வழிவகுப்பதாலும், இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் குற்றங்கள் நடக்கக் காரணமாயிருப்பதாலும் இதற்கு அதிக வரி விதிக்கின்றன. இந்த அதிக வரியை பாவ வரி என்று மக்கள் வழக்காகக் குறிப்பிடுகிறார்கள். இது ஒருவகையில் உற்பத்தி அல்லாத சேவை வரியேயாகும். சில பொருட்களுக்கு உற்பத்தி நிலையிலும், விற்பனை நிலையிலும், பயன்பாட்டு நிலையிலும் அதிக வரி விதிக்கப்படுகிறது. இந்த அதிக வரிவிதிப்பே பாவ வரி என்றழைக்கப்படுகிறது.

English
A mandatory charge, usually of money, imposed by a government to help pay for its operating costs. See also regressive tax, progressive tax, and "sin tax."