tax incentives

வரிச் சலுகைகள்

தமிழ் விளக்கம்

தனிமனிதர்களையோ அல்லது பொருளாதார நடத்தைகளையோ, ஊக்குவிக்கவோ அல்லது தடைசெய்யவோ, அரசோ அதன் பிற அமைப்புகளோ திட்டமிட்டுச் செயல்படுத்தும் வரிக்கொள்கைகள். எடுத்துக்காட்டாக, கைத்தொழில்களுக்கோ அல்லது அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்களுக்கோ அரசு முற்றிலும் வரிச் சலுகை அளிக்கலாம். அதே மாதிரி புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களால் பெருநகரங்களில் மாசு ஏற்படுவதைத் தடுக்கவும் அதற்கு அதிக வரி விதிக்கலாம்.

English

Government programs designed to encourage certain behaviors through policies of taxation. For example, a government may reduce or forgive taxes on a business that agrees to establish laborintensive factories in its jurisdiction. A government may also attempt, through heavy taxation, to discourage actions such as smoking tobacco products or driving automobiles that consume great amounts of fuel, which is also known as a tax disincentive.