tax resistance movement

வரி கொடா இயக்கம்

தமிழ் விளக்கம்

அரசாங்கங்களின் வரிக்கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற தற்காலிக மற்றும் நிரந்தர முயற்சிகளை வரி எதிர்ப்பு அல்லது வரி கொடா இயக்கம் எனலாம். வரி எதிர்ப்பு என்பது பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் அரச எதிர்ப்புச் செயலாகும். இது அதிக வரி விதிப்பிற்கு எதிரான போராட்டமாகவும், வரிப்பணத்தை அரசு பொறுப்பில்லாமல் செலவழிப்பதற்கு எதிரான போராட்டமாகவும், வரி விதிப்பிலிருந்தும் வரி கட்டுவதிலிருந்தும் விடுபட கள்ளச் சந்தையில் ஈடுபட்டும், அதிக வரிவிதிப்பிற்கு எதிராகச் செயல்படும் அரசியல் வாதிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பது போன்ற பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பு வெளிக்காட்டப்படும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது. காந்தியடிகள் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் என்பது வெள்ளை அரசு உப்பிற்கு விதித்த வரியை எதிர்த்து நடத்திய போராட்டமாகும்.

English

Organized and ad hoc responses to government taxation policies. The movement is worldwide and tends to mobilize in open societies in which tax increases occur or in which taxes are used for government actions that taxpayers dislike. The movement takes a variety of forms, from illegal tax avoidance and use of the underground economy to finding "loopholes" of dubious legality to supporting candidates who promise lower taxes and participating in antitax lobbying groups. Among the largest of the U.S. groups are the National Taxpayers Union, founded in 1969; Americans for Tax Reform, 1985; Citizens for an Alternative Tax System, 1990; and the National Tax Limitation Committee, 1975. Many organizations advocate changes in or the elimination of the progressive income tax system, recommending a national sales tax system and eliminating expensive government social services programs.