Taylor, Graham (1851-1938)
டெய்லர், கிரஹாம் (1851-1938)
தமிழ் விளக்கம்
டெய்லர், கிரஹாம் (1851-1938) - பன்முக ஆளுமை கொண்ட சமூக சீர்திருத்தவாதி. சிகாகோ ஊழியரகத்தை உருவாக்கி நடத்தியவர். சமூக சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும், நட்பார்ந்த வருகையினருக்கும் இவர் வடிவமைத்து நடத்திய பயிற்சிகளே, சமூகப்பணிக் கல்வியின் பாடத்திட்டமாகியது. கருத்தாய்வு (Survey) என்ற சமூகப்பணியின், அதிகாரபூர்வமற்ற ஆனால் செல்வாக்குமிக்க கருத்து தொடர்பு சாதனமாக இருந்த பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பார்க்க: Kellogg, Paul Underwood (1879-1958) - பால் அண்டர்வுட் கெல்லாக் (1879-1958) - இவர் நியூயார்க் அறக்கட்டளை சங்கம் நடத்திய கோடைகாலப் பள்ளியில் (சமூகப்பணிக்கல்வியின் முன்னோடி) சமூகப்பணி பயின்று, அந்நிறுவனத்தின் பத்திரிகையான தர்மசிந்தனை (Charity) யில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் அப்பத்திரிகை கருத்தாய்வு (Survey) என்று பெயர் மாற்றம் பெற்றது. கருத்தாய்வு சமூகப்பணியின் அதிகாரபூர்வமற்ற ஆனால் செல்வாக்குமிக்க தொடர்பு சாதனமாக இருந்தது. கெல்லாக், எழுத்தாளராக (பத்திரிகைப் பணி) மட்டுமல்லாது, பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

English
Settlement house founder and early developer of social work education, he developed training courses for volunteers and friendly visitors that were incorporated into the first social work curriculum. He also founded and edited one of the first social work journals, The Survey.