technological disaster

தொழிற்சாலைப் பேரழிவு, தொழில்நுட்பப் பேரழிவு

தமிழ் விளக்கம்

புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, சூறாவளி, பனிப்புயல், போர்கள் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் ஏற்படும் பேரிடர்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டவே, தொழிற்சாலைகளில் தொழில்நுட்பம் அல்லது தயாரிப்பு முறைகளால் ஏற்படும் விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவதால் ஏற்படும் தொற்று நோய்கள், பொருட்சேதம் போன்ற துயரங்களைக் குறிக்க தொழில்நுட்ப பேரழிவு என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கசிவுகளால் ஏற்படும் விபத்துகள், கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவுகள், அணு உலைகளில் ஏற்படும் விபத்துக்கள், நீர்த்தேக்கங்கங்கள் (அணைகள்) உடைதல் போன்றவை தொழில்நுட்பப் பேரழிவுகளாக கருதப்படுகின்றன. இந்தியாவில் போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவு, உலகில் பல இடங்களில் ஏற்பட்ட அணு உலை விபத்துக்கள், விமான விபத்துக்கள், கப்பல் விபத்துக்கள் போன்ற நிகழ்வுகள் தொழில்நுட்பப் பேரழிவிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

English

A disaster caused by accidents within manufacturing plants or conveyances that causes mass destruction to people, property, or the environment in a widespread area. The designation is used by disaster experts to distinguish these kinds of problems from natural disasters such as earthquakes, drought, famine, floods, and hurricanes and from war or civil conflict. Technological disasters include such events as massive oil spills, nuclear power generator breakdown and contamination of an area, or dams bursting and flooding populated areas down-river.