teen court

சிறார் / இளைஞர் நீதி மன்றம்

தமிழ் விளக்கம்

அமெரிக்கப் பொதுச் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாவிட்டாலும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் சிறார் நீதிமன்றங்கள். இது இளைஞர் நீதிமன்றம், பதின்ம வயதினற்கான / விடலைப் பருவத்தினருக்கான நீதி மன்றம், சரியினையானவருக்கான நீதிமன்றம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சில்லறைக் குற்றங்கள் புரிந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த, பாரம்பரிய சிறார் நீதி மன்றங்களுக்கு மாற்றாக, இளைஞர்களையே வழக்குத் தொடுப்பவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பரிந்தாதரித்துப் பேசுபவர்களாகவும், செய்தித் தொடர்பாளர்களாகவும் செயல்பட வைத்து, சின்னச் சின்னக் குற்றங்களில் ஈடுபடுபவரைச் சீர்திருத்தும் நடைமுறை. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நடைமுறைகள், இளைஞர் நீதிமன்றத்தில் பங்கெடுப்பவர்களின் அனுபவம் மற்றும் கல்வித் தகுதி, கொடுக்கப்படும் பயிற்சிகள், சம்பிரதாய நீதிவழங்கு அமைப்புகளின் பங்கேற்பு மற்றும் கண்காணிப்பைப் பொறுத்து, இளைஞர் நீதிமன்றங்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

English

Justice system programs for juvenile offenders in which adolescents charged with crimes are prosecuted, defended, and sentenced by their peers in real courtrooms under the supervision of adult judges and court officials. These courts were conceived in Texas in the 1970s and are now found in nearly every U.S. state. Teenagers who serve as prosecutors, jurors, or spokespersons for defendants are volunteers or are often themselves serving teen court sentences.