temperament

உளப்பாங்கு, மனப்போக்கு, உணர்ச்சி இயல்பு, குணவியல்பு / பண்பு நலன், சுவாபம், குணம், இயல்பான உடல் உளநிலை, இயற்கையான பண்பு, மெய்ந்நிலைக்கூறு.

தமிழ் விளக்கம்

மனித ஆளுமையின் இயல்பான மனம், உணர்வு மற்றும் அணுகுமுறையைக் குறிப்பது. மனப்பான்மை பலவகைப்படும் - ராசச மனப்பான்மை (bilious temperament), முன்கோபக்குணம் (choleric temperament), சம சுதிமட்டுப்பாடு (equal temperament), விசனமனப்பான்மை (melancholic temperament), தாமச உளப்பான்மை (phlegmatic temperament), சத்துவ உளப்பான்மை (sanguine temperament). இந்திய மெய்யியல் மானுட உளப்பாங்கை மூவகையாக வகைப்படுத்துகின்றனர்.
முக்குணங்கள் அல்லது மூவகை உளப்பாங்கு (Guṇa) என்பது சாங்கிய தத்துவத்தின்படி சாத்விக குணம், இராட்சத குணம், மற்றும் தாமச குணம் ஆகியவைகளைக் குறிப்பதாகும். சத்வகுணம் நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம். மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை சத்துவ குணமுடையவர்களின் அடையாளம்.
தர்மச்செயல்கள்; தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும்.
ரஜோ குணம்: ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ரஜோ குணப் பண்புகளாகும்.
தமோ குண இயல்புகள்- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணப் பண்புகளாகும்.

English

The affective component of a person's personality.