Temporary Assistance to Needy Families (TANF)
உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவித் திட்டம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் 1996 ஆம் ஆண்டைய சமூக நலத் திட்டங்களான ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டம் (Aid to Families with Dependent Children), வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Job Opportunities and Basic Skills Training), துணை வருமானப் பாதுகாப்பு திட்டம் (Supplemental Security Income), மருத்துவ உதவித் திட்டம் (medicaid) போன்றவற்றில் திருத்தங்கள் செய்து, அமெரிக்க அரசின் சமூகநலத் திட்டங்களை சீரமைக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம். இச்சட்டத்தின் மூலமாக சில சமூகநலத் திட்டங்கள் கலாவதியாக, வேறுசில திட்டங்களின் மூலம் கிடைத்த நன்மைகள் குறைக்கப்பட்டன. மாற்றத்திற்கு உள்ளான சில திட்டங்கள் - ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுதல் (Aid to Families with Dependent Children (AFDC), உணவு அடையாளச் சீட்டு / படிவம், உணவுப் பொருட்கள் வாங்க பணமோ பணயுதவியோ பெறுவதற்காகக் கொடுக்கப்படும் படிவம் (Food Stamp program). சமூக நல மொத்த மானியம், (Social Services Block Grants), சிறார் பாதுகாப்புத் திட்டங்கள் (child protection programs), சத்துணவு திட்டங்கள் (child nutrition programs), ஈட்டிய வருமானத்தின் மீதான வரித் தள்ளுபடி (earned income tax credit ). எடுத்துக்காட்டாக ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டம், தேவையுள்ள குடும்பங்களுக்கான தற்காலிக உதவி என்று மாற்றப்பட்டு, அக்குடும்பத்து பெற்றோர் உதவி பெற ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் வேலைக்குச் செல்லவேண்டும், உதவிக்காலம் காலவரையின்றி தொடராமல் ஐந்து வருடங்களுக்குள் முடிந்துவிடும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 18 வயதிற்குக் குறைவான திருமணமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள், தங்களுடைய பெற்றோர் அல்லது உறவினருடன் வசித்தால்தான் உதவி பெறத் தகுதியானவர் என்று கணிக்கப்பட்டனர். ஏற்கனவே குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெரும் பெற்றோர்கள் மீண்டும் குழந்தை பெற்றால் அக்குடும்பத்திற்கு உதவி நிறுத்தப்ட்டது. எல்லோருக்குமான மருத்துவ உதவி உத்தரவாதம் கடுமையான நிபந்தனைக்குள்ளாக்கியது. சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற அகதிகளின் துணை வருமானப் பாதுகாப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் அமெரிக்க குடிமகன் அந்தஸ்து பெற்றால்தான் சில நலத்திட்டங்களுக்கு தகுதியாவர்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த அகதிகளுக்கான உதவி ஐந்து வருட காலத்திற்கு மட்டும் என்ற புது நிபந்தனை உருவானது. உணவு அடையாளச் சீட்டு வழங்குவதில் மாநிலங்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. முடக்குவாதம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் துணை வருமானப் பாதுகாப்பு திட்டத்திலிருந்து விலக்கழிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகளின் விளவு என்னவென்று முழுதுமாக அறியப்படவில்லை.
English
The U.S. federally structured welfare program established in 1996 to replace the Aid to Families with Dependent Children (AFDC) program; the Job Opportunities and Basic Skills Training ( JOBS) program; emergency assistance; and some provisions in Medicaid, Supplemental Security Income (SSI), and other programs. The program is part of the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (P.L. 104-193) and gives the states more authority to create and manage their own welfare programs. States are permitted to cut their welfare spending by up to 25 percent without losing the fixed federal block grants. Unlike the AFDC program, TANF cash assistance is no longer considered an entitlement, lifetime eligibility of benefits is reduced to a total of five years, and benefits to legal immigrants are restricted. One provision that limited the amount a welfare recipient who moves into a state with higher benefits to the amount previously received in the lower paying state was invalidated in a 1997 Supreme Court decision. TANF is usually pronounced "tanif."