Temporary Inter-Association Council of Social Work Membership (TIAC)
சமூகப்பணி உறுப்பினருக்கான தற்காலிக கூட்டமைப்பு கழகம்.
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய தேசிய அமைப்புகளின் கூட்டிணைவாகும். ஏழு வேறுபட்ட சங்கங்களையும், அதிலிருந்த உறுப்பினர்களையும் ஒன்றாக்குமுன், தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தில் இணையவிருந்த அமைப்புகளின் தற்காலிக கூட்டமைப்பை உருவாக்கி, அந்தக் கூட்டமைப்பின் மூலமாக தற்காலிக உறுப்பினர் அடையாளமும் வழங்கப்பட்டது. சமூகப்பணி தொடர்புடைய ஏழு சங்கங்கள் கூட்டிணையும் முயற்சி 1950 தொடங்கப்பெற்று 1955 தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனமாக உருவான இடைக்காலத்தில் இந்த ஏழு சங்கங்களையும் அதன் உறுப்பினர்களையும் ஒரு தற்காலிக அமைப்பின் மூலம் இணைத்தார்கள். (கூட்டிணைந்த ஏழு சங்கங்கள் 1. அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Social Workers (AASW) 2. அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Psychiatric Social Workers (AAPSW) 3. அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம், 4. சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம் (Association for the Study of Community Organization (ASCO) 5. அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Medical Social Workers (AAMSW) 6. தேசியப் பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான சங்கம் (National Association of School Social Workers (NASSW) 7. சமூகப்பணி ஆய்விற்கான குழு (Social Work Research Group (SWRG).
English
An organization formed in 1950 to consider ways to structure the social work profession and its organizations in the United States. TIAC was made up of representatives from many social work organizations, and the goals, values, and governance of these groups were compared. TIAC issued a plan for a single new social work organization in 1952; by 1955 the plan was adopted by the seven organizations that merged to form the National Association of Social Workers (NASW).